தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் 'பிட்காயின்' மோசடி - ரூ. 31 லட்சத்தை இழந்த நபர் ! - 5 person arrested for bitcoin crime

திருச்சி: பிட்காயின் திட்டம் மூலம் ரூ.31.15 லட்சம் மோசடி செய்ததாக மெடிக்கல் உரிமையாளர் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

bitcoin
'பிட்காயின்

By

Published : Dec 11, 2019, 8:47 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சங்கப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு. இவரது மகன் முருகேசனிடம், மெடிக்கல் கடை நடத்தும் கார்த்திக் (38) என்பவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் உள்ள பிட்காயின் திட்டம் குறித்துக் கூறியுள்ளார். இந்த நிறுவனத்தை மதுரையைச் சேர்ந்த ராஜதுரை, இவரது மனைவி சுவேதா, டெல்லியைச் சேர்ந்த சிம்ரன் கவுர், மத்தீப் கவுர், மரிய செல்வம் ஆகியோர் நடத்திவருகின்றனர். இதில் தானும், குட்டமணி, கணேசன், தங்கராஜ் ஆகியோர் முகவர்களாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் டாலர் மதிப்பில் ரூ. 750 முதலீடு செய்தால் தினமும் ரூ. 3 முதல் 50 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். டாலருக்குத் தகுந்தாற்போல் கமிஷன் அதிகரிக்கப்படும். மேலும் அறிமுக கமிஷன், மேட்சிங் கமிஷன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்து 900 கிடைக்கும். இதனால், அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்தால் நிறையச் சம்பாதிக்கலாம் எனப் பேசி ஆசை வார்த்தையில் முருகேசனை மயக்கியுள்ளனர்.

இதை நம்பிய முருகேசன், திருச்சியில் வைத்து கார்த்திக்கிடம் ரூ. 36.40 லட்சத்தைப் பல தவணைகளில் கொடுத்துள்ளார். இதில் ரூ. 5.25 லட்சத்தைத் திருப்பி கொடுத்துள்ளனர். ஆனால், மீதமுள்ள ரூ.31.15 லட்சத்தைத் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். பின்னர் முருகேசன் விசாரித்தபோது, இதேபோல் அந்த கும்பல் பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் துறையிடம் முருகேசன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.

தற்போது, தலைமறைவாக இருந்த கார்த்திக், நாமக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் (43), மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த குட்டிமணி (35), கணேசன் (48), தங்கராஜ் (26) ஆகியோரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், குற்றம் உறுதியானதையடுத்து, ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆத்திரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்!

ABOUT THE AUTHOR

...view details