திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 57 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களில் ஏற்கனவே 51 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த நபர்கள், சென்னையினை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து வந்த நபர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த 4, 5ஆம் தேதிகளில் ஐந்து நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 256 நபர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 253 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை. மூன்று நபர்களுக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.