தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி என்.ஐ.டி.யில் 270 சீட்டுகள் அதிகரிப்பு: இயக்குனர் மினி ஷாஜி தகவல் - 270 seats

திருச்சி: பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 270 சீட்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குனர்  (என்.ஐ.டி. ) மினி ஷாஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

trichy nit

By

Published : Jul 25, 2019, 7:44 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”என்.ஐ.டி., 15ஆவது பட்டமளிப்பு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 1,721 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. தேசிய தொழில்நுட்ப கழகங்களுக்கு மத்தியில் முதலிடத்திலும், இந்திய பொறியியல் கல்லூரிகள் பட்டியலில் 10ஆவது இடத்திலும், ஆர்க்கிடெக்சர் பிரிவில் 7ஆவது இடத்திலும், மேலாண்மை துறை பட்டியலில் 17ஆவது இடத்திலும் திருச்சி என்.ஐ.டி உள்ளது.

திருச்சி என்.ஐ.டி.யில் 270 சீட் அதிகரிப்பு

பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 270 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details