மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவரின் நடத்தையில் அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
திருச்சியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்! - Gold seized
திருச்சி: விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 467 கிராம் கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
GOLD SEIZED
அப்போது அவர் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடமிருந்து 467 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15.12 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் கடத்தி வந்த பயணி ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது ரகு அலிகான் (43) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.