திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள ஆவிகாரப்பட்டி, வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் முறையாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை மிரட்டிய அரசியல்வாதிகள்
திருச்சி: நூறுநாள் வேலைவாய்ப்பை முறையாக வழங்கக்கோரி நடைப்பெற்ற சாலை மறியல் போரட்டத்தில் பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில், இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (ஜூன் 21) காலை மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கிருந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் மறியலில் ஈடுபடக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் 100 நாள் வேலை தொடர்ந்து வழங்கப்படும் என ஊராட்சி செயலர் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.