திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிபாபு. இவர் தனியார் தபால் சேவை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்துவருகிறார். தனது நண்பர்களுடன் ஹரிபாபு அங்குள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றார்.
குளித்துக் கொண்டிருந்தபோது நீருக்குள் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீரில் மூழ்கிய அவரை, நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், ஆரணி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததனர்.