தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏ நிதி பரிந்துரைக்கு தடைபோட்ட கரூர் ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டனம்! - Chennai high court

சென்னை : அரவக்குறிச்சி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்பாலாஜியின் தொகுதி நிதி பரிந்துரையை நிராகரித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ நிதி பரிந்துரைக்கு தடைப்போட்ட கரூர் ஆட்சியருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!
திமுக எம்.எல்.ஏ நிதி பரிந்துரைக்கு தடைப்போட்ட கரூர் ஆட்சியருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

By

Published : Sep 23, 2020, 5:59 PM IST

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் வாங்க தனது தொகுதி நிதியிலிருந்து ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாயை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, செந்தில் பாலாஜி பரிந்துரை செய்தார்.

அந்த நிதி பரிந்துரையை ரத்துசெய்வதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவு பிறப்பித்திருந்தார். கரூர் ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பாக நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தபோது மனுதாரர் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்குரைஞர் பிரபாகரன், "செந்தில் பாலாஜியின் நிதியை அரவக்குறிச்சி தொகுதிக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று சொல்வதை ஏற்க முடியாது.

தமிழ்நாடு முதலமைச்சர் எம்எல்ஏக்கள் தொகுதி நிதியை கரோனா பரவல் தடுப்பு, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவம் உள்ளிட்ட நிவாரண உதவிகளுக்குப் பயன்படுத்துவது எப்படி சாத்தியமானது?" எனக் கேள்வி எழுப்பினார்.\

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதனால் நிதி பயன்படுத்தப்படவில்லையா? கரோனா பாதிப்பு சூழலில், செந்தில் பாலாஜியின் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை பயன்படுத்த வேண்டும், ஆனால் பயன்படுத்தாமல் அதை நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடையை நீக்குவதாக உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details