இது தொடர்பாக விழுப்புரத்தில் இன்று (அக்.23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு, அரசு பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு பணியாளர்களின் 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும்.
"பழைய ஓய்வூதிய திட்டமே வேண்டும்" - தமிழ்நாடு அரசு பணியாளர் கோரிக்கை!
விழுப்புரம்: அரசு பணியாளர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின்
தமிழ்நாடு அரசு பணி நியமனம், பதவி உயர்வு, பணியிட மாறுதல் ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையுடன் பரிந்துரையின்றி தகுதி அடிப்படையில் உத்தரவுகள் வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. சிவகுமார், மாநில பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.