தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறக்கும் படை சோதனையில் 10 கோடி பறிமுதல்! - tamilnadu merchantile bank

திருப்பூர்: பல்லடம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் பணத்தை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

தனியார் வங்கி வாகனம்

By

Published : Mar 28, 2019, 9:09 PM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தைத் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரவாவி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று மதியம் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியார் வங்கிக்கு சொந்தமான வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 10 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்படுவதை கண்டுபிடித்தனர்.

ஆனால், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பிடிபட்ட பணத்தைப் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு அவ்வாகனத்தில் வந்த வங்கி ஊழியர்களுக்கு அறிவுறுத்தபட்டு, அவ்வங்கி அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளதாகப் பறக்கும் படை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details