தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் இதுவரை 23 பேர் உயிரிழப்பு!

தேனி : மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழக தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் இதுவரை 23பேர் உயிரிழப்பு!
மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் இதுவரை 23பேர் உயிரிழப்பு!

By

Published : Aug 8, 2020, 6:59 PM IST

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராஜமலை பெட்டிமுடி பகுதி. அங்கு டாடா நிறுவனத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக அந்நிறுவனத்தால் கட்டித்தரப்பட்ட சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வீடுகள் சிக்கி மண்ணில் புதைந்தன. அந்தக் கோர விபத்தில் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, மீட்புப் படையினருடன் மாநில பேரிடர் துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சம்பவ இடத்தில் மோசமான வானிலை நிலவிவருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதையடுத்து தேசிய பேரிடர் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

மூணாறு பெருந்துயரான நிலச்சரி நடந்த பகுதி

நிலச்சரிவில் சிக்கியவர்களில் முதற்கட்டமாக நேற்று (ஆகஸ்ட் 7) 15 பேர் சடலமாகவும், 12 பேர் பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் டாடா மருத்துவமனை மற்றும் கோலெஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூணாறு பெருந்துயர் : நிலச்சரிவில் இதுவரை 23பேர் உயிரிழப்பு!

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 8) மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எனினும், பெட்டிமுடி பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுவருகிறது. இச்சூழலில் இரண்டாவது நாளான இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராஜா (35), குட்டிராஜ் (48), விஜிலா (47), மணிகண்டன் (20), தீபக் (18), பவுன்தாய் (52), சண்முக அய்யன் (58), கண்மணி என 8 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details