நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2018-2019 ஆண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை.
ஆன்லைன் வகுப்பிற்கு மடிக்கணினி இல்லை.... பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகள்!
நாகப்பட்டினம்: மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், இவர்கள் அனைவரும் தற்போது கல்லூரியில் பயின்று வருகின்றனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கல்லூரி வகுப்புகள் இணையவழி மூலம் நடைபெறுவதால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தங்களால் புதிய மடிக்கணினி வாங்கி பயன்படுத்த முடியாமல், இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய விலை இல்லா மடிக்கணினியை உடனே வழங்க வலியுறுத்தி நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகை நகர காவல்துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.