இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயுஷ் அமைச்சகத்தில் சித்த மருத்துவ இணை ஆலோசகராக சென்னையில் பணியாற்றி வந்த சித்த மருத்துவர் ரவி பதவி இறக்கம் செய்யப்பட்டதும், சித்த மருத்துவ இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டதும் கண்டிக்கத்தக்கவை. சித்த மருத்துவம் மீது மத்திய அரசு பாகுபாடு காட்டுவதை இது உறுதிசெய்கிறது.
அதேபோல், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்தா குண பாடத்தில் முதுநிலை பட்டம் படித்தவர்களை நியமிக்க வேண்டும். அத்தகையப் படிப்பு படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தும், ஆயுர்வேத மருத்துவரை நியமித்தது சித்த மருத்துவ முறையை அவமதிக்கும் செயல் ஆகும்.