தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊர்க்காவல் படை அலுவலகத்தை திறந்து வைத்த பெரம்பலூர் எஸ்.பி.,! - புதிதாக கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலகம்

பெரம்பலூர் : நகர போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் இன்று திறந்துவைத்தார்.

ஊர்க்காவல் படை அலுவலகத்தை திறந்து வைத்த பெரம்பலூர் எஸ்.பி.,!
ஊர்க்காவல் படை அலுவலகத்தை திறந்து வைத்த பெரம்பலூர் எஸ்.பி.,!

By

Published : Nov 20, 2020, 3:41 PM IST

பெரம்பலூர் கடை வீதி பகுதியிலுள்ள நகர போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படைக்காக கட்டப்பட்ட புதிய அலுவலகத்தின் திறப்புவிழா இன்று நடைபெற்றது.

அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் புதிய கட்டத்தைத் திறந்து வைத்தார்.

இதனையடுத்து, புதிதாக கட்டப்பம்ம பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பயிற்சி பள்ளி ஒன்றையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், "இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. சாலை பயணங்களில் போக்குவரத்து விதிகளை மதித்து பயணம் செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details