மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தங்களான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020, தேசிய மீன்வள கொள்கை, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத் திருத்தம் 2020 ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும், புதிய தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்தும், இட ஒதுக்கீட்டு கொள்கையில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புதிய சட்டத் திருத்தங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! - New legal amendment 2020s
நாகப்பட்டினம்: மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Naam tamilar katchi protest against central government
நாகப்பட்டினம் அவுரி திடலில் நாம் தமிழர் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது, மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.