தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கட்டடக் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் கே.பி. அன்பழகன் ! - Minister KP Anbazhagan

தருமபுரி : அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட புதிய கட்டடக் கட்டுமான பணிகளை தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தருமபுரியில் ரூ.7 கோடி மதிப்பிலான புதிய கட்டடக் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் கே.பி. அன்பழகன் !
தருமபுரியில் ரூ.7 கோடி மதிப்பிலான புதிய கட்டடக் கட்டுமான பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் கே.பி. அன்பழகன் !

By

Published : Nov 6, 2020, 2:34 PM IST

தருமபுரி மாவட்டத்தின் அதகபாடி மற்றும் நல்லம்பள்ளி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள், அரசு பொறியியல் கல்லூரியில் எம்.பி.சி மாணவர் விடுதி ஆகிய கட்டுமான பணிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கலந்துகொண்டார்.

அதேபோல, பாலக்கோடு வட்டம் சாமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பயிர் கடன்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details