கோவை மாவட்டம் பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சியில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கோவை: ஷாஹின் பாக் போராட்டக்காரர்கள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்தைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், கிழக்கு டெல்லியில் ஷாஹின் பாகில் சிஏஏ-விற்கு எதிராக போராடியவர்கள் மீது ஆர்எஸ்எஸ், பாஜகவினர் நடத்திய கொலை வெறி தாக்குதலை கண்டிப்பதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோர் மீது பொய் வழக்கை பதிவு செய்வதையும், மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் மகாலிங்கம், சிடிசி சேதுராமன், மதிமுக துரைபாய் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.