தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் வாளியில் 9 மாத குழந்தை விழுந்து உயிரிழந்த சோகம்! - வாளியில் குழந்தை விழுந்து உயிரிழப்பு

கோவை: ஒன்பது மாதம் கை குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Police station
Police station

By

Published : Sep 17, 2020, 3:12 PM IST

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சிவராஜ் கார்டன் பகுதியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபுல் உசேன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவியும் ஒன்பது மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

நேற்றிரவு வீட்டில் கணவன், மனைவி இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் இடையில் எழுந்து பார்க்கையில் அருகில் தூங்கி கொண்டிருந்த கை குழந்தை காணவில்லை எனத் தெரியவந்தது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காணமல் போன குழந்தையை தேடிக் கொண்டிருக்கும்போது, பாத்திரம் கழுவ வைத்திருந்த தண்ணீர் வாளியில் குழந்தை மூழ்கி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர், அ‌ங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர் குழந்தை உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details