மதுரை:தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'பழனி, பெரியகுளத்தின் சில பகுதிகள் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதி ஆகியவற்றை வனவிலங்கு சரணாலயமாக அறிவித்து, அரசு அரசாணையை வெளியிட்டது. கொடைக்கானல் வன விலங்கு சரணாலயம் 608 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல வகையான புல் வகைகள், தூய்மையான நீர் நிலைகள் என சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சூழல் உள்ளது.
அனுமதி பெறாத சாலைப் பணி: இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலர்கள் மார்ச் 2ஆம் தேதி ஆய்வு செய்து, வட்டக்கானல் பகுதி வழியாக டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தை அடைவதற்கு வனப்பகுதி வழியாக சாலை அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள வன உயிரினங்கள் பாதிக்கப்படும். இப்பகுதியில் சாலை அமைக்க முறையான அனுமதி பெறப்படவேண்டும். ஆனால், அதுபோல எவ்விதமான அனுமதியும் பெறவில்லை.