தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - heavy rain alert

சென்னை: தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By

Published : Oct 30, 2020, 2:38 PM IST

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழையும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாட்டில், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details