தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்! - Gutka drug items worth Rs 50,000 confiscated In Sriperumbudur

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூரில் கூல் ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்!
ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருள்கள் பறிமுதல்!

By

Published : Nov 18, 2020, 10:34 PM IST

Updated : Nov 18, 2020, 10:57 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தேரடி வீதியில் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்திருப்பவர் பாபு (63). அவர் தனது வீட்டில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில், பாபுவின் வீட்டிற்கு விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வீட்டில் 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, குட்கா போதைப் பொருள்களை பறிமுதல் செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கூல் ட்ரிங்ஸ் கடை உரிமையாளர் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last Updated : Nov 18, 2020, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details