தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (57). இவரை கயத்தாறு தெற்கு மயிலோடை பகுதியை சேர்ந்த செல்லத்துரை (41), சிவகங்கை மாவட்டம், V.புதுக்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் (56) ஆகியோர் முன்விரோதம் காரணமாக கம்பால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக செல்லத்துரை, சரவணன் ஆகிய இருவரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்லத்துரை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர்(பொறுப்பு) பத்மாவதி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளர் அறிக்கையின் அடிப்படையில் செல்லத்துரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பரிந்துரை செய்தார்.
முன்விரோத்தில் கொலை முயற்சி: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது - குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி: கயத்தாறில் முன்விரோத்தில் கொலை முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டத்தில் கைது
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் ஒப்புதலின் பேரில் செல்லத்துரையை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.