இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு!
சென்னை : முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, சின்னையா ஆகியோர் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சோமசுந்தரம், கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பரஞ்ஜோதி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாலாஜாபாத் கணேசன், நீலகிரி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் புத்திச்சந்திரன், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரத்தினவேல், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மருதராஜ், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பிரபாகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பொறுப்பில் இருக்கும் இளவரசன், இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ரமணா, மாதவரம் மூர்த்தி, சின்னையா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன், கழக வர்த்தக அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.