தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு பேக்கரி விபத்து: பெரும் சேதம் தவிர்ப்பு! - Erode bakery fire accident

ஈரோடு: ஐந்து மாதங்களாகப் பூட்டப்பட்டிருந்த பேக்கரியை ஊழியர்கள் திறந்தபோது கடையிலிருந்து புகை வெளிவந்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தீ விபத்து ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Fire accident
Fire accident

By

Published : Sep 10, 2020, 3:48 PM IST

ஈரோடு பேருந்து நிலையத்தையொட்டி மாநகராட்சிக்கு சொந்தமான வணிகவளாக கட்டடத்தில், சுமார் 30க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையம் அருகே அமைந்திருப்பதால் பயணிகளுக்குத் தேவையான தின்பண்டங்கள் விற்கும் கடைகள், தேநீர் கடைகள் இயங்கிவந்தன. கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பேருந்து நிலையத்தில் பயணிகள் இல்லாததால் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

பேருந்துகள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து தொடங்கியதால், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த தனியாருக்குச் சொந்தமான குளிர்பானம் மற்றும் பேக்கரி நிலையத்தை ஊழியர்கள் காலை திறந்துள்ளனர். அப்போது கடைக்குள் இருந்து கரும்புகை வெளிவந்ததால் அதிர்ச்சியடைந்து, ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடைக்குள் மின்சார இணைப்பு கொண்ட தின்பண்டங்களை சுடவைக்கும் இயந்திரத்திலிருந்து புகை வெளிவருவதைக் கண்டு மின்சார இணைப்பைத் துண்டித்துவிட்டு தண்ணீரை அதன் மீது வீசியடித்து தீ விபத்தைத் தவிர்த்தனர். மின்சாரக் கசிவு காரணமாக பெரும் தீ விபத்து நிகழ இருந்ததையும், அதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீ விபத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டது.

தீ விபத்து தவிர்க்கப்பட்டதால் வணிக வளாகத்தில் கடைகளை வைத்திருந்தவர்கள் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன் தீயணைப்புத் துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details