தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பரங்குன்றம் மலையில் மதுபோதையில் ஆட்டம் போட்ட இளைஞர்களால் பரபரப்பு! - மலையில் விளையாடிய இளைஞர்கள்

மதுரை: திருப்பரங்குன்றத்தில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் மழையில் நனைந்தபடி திருப்பரங்குன்றம் மலையில் விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Drunk youths in Thiruparankundram hill were involved in a perverted game
திருப்பரங்குன்றம் இளைஞர்கள்

By

Published : Sep 11, 2020, 12:35 AM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான மழைபெய்துவந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை மேல் அமர்ந்திருந்த சில இளைஞர்கள், மதுபோதையில் உயரமான மலையிலிருந்து சறுக்கி விளையாடியதோடு தொடர்ந்து அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.

மழை பெய்துகொண்டிருக்கும் போது மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுபோதையில் செய்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மலையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details