கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன். இவரது உதவியாளராக இருப்பவர் சந்திரகுமார்(40). சென்னையில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சுரேஷ்ராஜன் அவரது உதவியாளர் சந்திரகுமாருடன் செல்ல இருக்கிறார். சென்னை கோட்டைக்குள் செல்ல வேண்டுமென்றால் கரோனா பரிசோதனை முடித்து அதற்கான நகலை கொண்டுச் செல்ல வேண்டும். இதற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்திரகுமார் பரிசோதனை எடுத்துக்கொண்டார்.
அலைகழித்த அரசு மருத்துவமனை: திமுக எம்எல்ஏவின் உதவியாளர் ஆர்ப்பாட்டம் - ஆசாரிப்பள்ளம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜனின் உதவியாளருக்கு கரோனா பரிசோதனை முடிவுகளை வழங்காமல் அலைகழித்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அவர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அலைந்தும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இந்நிலையில், இன்று (செப் 11) அவருக்கு வேறு சில பணிகள் இருந்ததால் பரிசோதனை முடிவுகளை வாங்கி வரும்படி ஆசாரிப்பள்ளம் பகுதி 40ஆவது வட்ட செயலாளர் விமல் என்பவரை அனுப்பி வைத்தார். அவர் சென்று கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் துண்டு சீட்டில் கரோனா இல்லை என்று எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமல், மருத்துவமனை சீட்டில் மருத்துவமனை சீல் பதிந்த பரிசோதனை முடிவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் மருத்துவமனையில் உள்பகுதியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அச்சமடைந்த மருத்துவமனை நிர்வாகம் அரசு மருத்துவமனை சீட்டில் சீலுடன் பரிசோதனை முடிவுகளை வழங்கியது.