தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2021 தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக - மங்கைநல்லூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம்! - Nagappattinam news

மயிலாடுதுறை: பூம்புகார் தொகுதிக்குள்பட்ட மங்கைநல்லூரில் குத்தாலம் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

2021 தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக - மங்கைநல்லூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் !
2021 தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக - மங்கைநல்லூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் !

By

Published : Nov 17, 2020, 10:23 PM IST

குத்தாலம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நேற்று (நவ. 16) வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் வரைவுப் பட்டியலைச் சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதாக அறிய முடிகிறது.

வாக்காளர் வரைவு பட்டியலில் இடம்பெறாத புதிய வாக்காளர்கள் பெயர்கள் இணைப்பது, தொகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பெயர் பட்டியலிலிருந்து நீக்குவது போன்ற பணிகளில் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் முழுமூச்சில் இயங்க வேண்டுமென திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வாக்குச்சாவடியில் பணியாற்றும் திமுகவின் அதிகாரப்பூர்வமான முகவர்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மாநில திமுக தேர்தல்குழு செயலாளர் கல்யாணம், மாநில கொள்கைபரப்பு துணைசெயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details