நாகையில் செய்தியாளர் உள்பட 69 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி! - Nagapattinam news
நாகை : நாகை மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 69 பேருக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
நாகையில் செய்தியாளர் உள்ளிட்ட 69 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி!
நாகை மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், அவரது இரண்டு உறவினர் உள்பட 69 பேருக்கு நேற்று (ஆக.8) ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக நாகை, சீர்காழி ஆகிய பகுதிகளிலுள்ள கோவிட்-19 சிறப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை ஆயிரத்து 145 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 11 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போதுவரை, 521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 613 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.