தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்புத்தூர் ஆட்சியர் வளாக சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்! - Coimbatore Collector office jubti

நில ஆர்ஜித வழக்கில், மூதாட்டிக்கு உரிய இழப்பீடு வழங்காததால், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

ஆட்சியர் அலுவலகம்
ஆட்சியர் அலுவலகம்

By

Published : Apr 22, 2021, 9:20 PM IST

கோயம்புத்தூர் கணபதி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதியம்மாள் (90), நிலத்தை, கடந்த 1983ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் கையப்படுத்தியது. அதற்காக, ஒரு சென்ட் ரூபாய் 200 என்று கணக்கிடப்பட்டு இவருக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த தொகை போதாது என்றும், அதனை உயர்த்தி தர வேண்டும் என்றும் சரவஸ்வதியம்மாள் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இவருக்கு வழக்கு எண் LAOP No:414/94ன் படி சென்ட் ரூபாய் 6,000 என கணக்கிட்டு வழங்க, கடந்த 2005இல் கோவை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், இந்தத் தொகையை தர மறுத்து வீட்டு வசதி வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதே சமயம் மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் மனுதாரருக்கு 6,000 ரூபாய் வழங்குவது சரி என்று கடந்த 2014ஆம் ஆண்டு கூறப்பட்டது.

அதன்படி மனுதாரருக்கு 67 லட்சத்து 87 ஆயிரத்து 144 ரூபாயை 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 தேதிக்குள் டெபாசிட் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை வீட்டு வசதி வாரியம் நிறைவேற்றாததை அடுத்து, மனுதாரர் சரஸ்வதியம்மாள் நீதிமன்றத்தை நாடினார்.

இவ்வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் சார்பு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ, டி.ஆர்.ஓ அலுவலகத்தில் உள்ள மேசை, நாற்காலி, பீரோ, கார், உள்ளிட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும், கோவை வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

ABOUT THE AUTHOR

...view details