தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 தேதி வரை நடைபெறும் வகையில் கூட்டத் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டப்படியே மார்ச் 9 ஆம் தேதியன்று கூட்டமும் தொடங்கியது.
மார்ச் 24ஆம் தேதிவரை தொடர்ந்து நடைபெற்றுவந்த கூட்டத்தொடர் மத்திய அரசின் முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து இடை நிறுத்தப்பட்டது. தற்போது 5 மாதங்கள் கழித்து சட்டப்பேரவை கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையை சமூக இடைவெளியோடு நடத்த போதுமான இடவசதி இல்லாதால், கூட்டத்தை வேறிடத்தில் நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
234 உறுப்பினர்கள், 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்குபெறும் வகையில் இட ஏற்பட்டை செய்திட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.