தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்போரூர் கோயில் சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்! - Thiruporur Kandhasamy temple

திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
கோயில் சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

By

Published : Sep 29, 2020, 7:19 PM IST

சென்னை:திருப்போரூர் கந்தசாமி முருகன் கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில், ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்கக்கோரி வழக்குரைஞர் ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அம்மனுவில்," செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 2,000 ஏக்கர் சொத்துக்கள் உள்ளன.

அவற்றை அபகரிக்கும் முயற்சியைத் தடுத்து, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை வருவாய் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துக்களை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று(செப்.29) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.கார்த்திகேயன்,"செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகளை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது" என தெரிவித்தார். அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்ற நீதிமன்றம், இரண்டு வாரங்களில் அளவீடு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details