தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி கிராம சபைக் கூட்டம்; திமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 222 பேர் மீது வழக்கு! - Case filed against 222 persons for conducting Grama sabha meeting in kumari

கன்னியாகுமரி : தடை உத்தரவை மீறி குமரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய 222 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 222 பேர் மீது வழக்கு!
தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 222 பேர் மீது வழக்கு!

By

Published : Oct 3, 2020, 9:50 PM IST

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், பல ஊராட்சிகளில் தடையை மீறி கிராம சபைக் கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. குறிப்பாக, எதிர்க்கட்சியான திமுக வெற்றிப்பெற்ற ஊராட்சிகளில் தடையை மீறி கூட்டங்கள் கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த வகையில், குமரி மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் தடையை மீறி கிராமசபைக் கூட்டம் நடந்தது. நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தேரேகால்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏவும், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏவும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அதேபோல, குமரி மேற்கு மாவட்டம் காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டார்.

பல்வேறு இடங்களில் தடையை மீறி திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அரசின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட 222 பேர் மீது காவல்துறையினர் ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details