தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருந்துறை சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்! - Ezhuthingalpatti village

ஈரோடு : பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை நிர்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்!
சிப்காட் நிர்வாகத்தை கண்டித்து கருப்பு கொடி போராட்டம்!

By

Published : Oct 20, 2020, 12:22 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை ஏறத்தாழ 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் 400க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

அந்த தொழிற்பேட்டையைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தொழிற்பேட்டையை ஒட்டி அமைந்துள்ள எழுதிங்கள்பட்டி என்ற கிராமத்தைச் சுற்றி கம்பிவேலி அமைக்க முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அக்கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று சிப்காட் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து அக்கிராம மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து கம்பிவேலி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், "எழுதிங்கள்பட்டி கிராமத்தைச் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டால், கிராமத்திற்கும் தொழிற்பேட்டைக்கும் எந்தத் தொடர்புமில்லாத நிலை ஏற்படும். சிப்காட் வளாகத்திற்குள் உள்ள பாதையை கிராம மக்கள் தங்களது தினசரி போக்குவரத்துப் பாதையை பெருந்துறை பிரதான சாலையை சென்றடையும் சாலையாக பயன்படுத்தி வருகின்றோம். இதில் சிரமத்தை விளைவிக்கும்.

மேலும், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் எங்களது கிராமத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கும் சிப்காட்டிற்குள் வேலைக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்படும்.

சிப்காட் நிர்வாகம் எங்களது கிராமத்தில் கம்பிவேலி அமைப்பதற்கான நியாயமான காரணத்தைக் கூறிடாமல் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

சிப்காட் நிர்வாகம் இந்த கம்பிவேலி அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்டமாக மக்களைத் திரட்டி சிப்காட் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details