தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்! - Villupuram news

விழுப்புரம்: தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வருகிற 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்!
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்!

By

Published : Oct 19, 2020, 10:34 PM IST

இது தொடர்பாக அம்மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தாற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 2008ஆம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ், தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்படி உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை அக்.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில் இடத்தின் கட்டட உரிமையாளரிடம் இருபது ரூபாய்க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிமக் கட்டணம் 600 ரூபாயை உரிய அரசு கணக்கில் செலுத்தி அதற்கான அசல் செலுத்திய சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சேவை கட்டணமாக ஐநூறு ரூபாயைச் செலுத்தி பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அரசின் உத்தரவுப்படி அக்டோபர் 23ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details