தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 10:29 PM IST

ETV Bharat / state

'விளம்பர மோகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்கும் அதிமுக அரசு' - ஸ்டாலின் காட்டம்

சென்னை : தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே குழப்பங்கள் நீடித்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விளம்பர மோகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்
விளம்பர மோகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்

இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், " ‘அரியர்ஸ்’ தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெறுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அவசரப்பட்டு அறிவித்ததிலிருந்தே குழப்பங்கள் நீடித்தபடியே இருக்கின்றன. உரிய ஆலோசனைக்குப் பிறகு, இது சாத்தியமெனில் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். அது குறித்தும் முறையான ஆலோசனை எதையும் இந்த அரசு செய்யவில்லை.

இந்நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பே அவசரமானது, அரைவேக்காட்டுத்தனமானது என்பதையே தற்போது வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தேர்வு இல்லாமல் - மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்பது உயர்படிப்புகளிலும் - தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளிலும், மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு அனுப்பிய கடிதம் நேற்று (செப்டம்பர் 8) வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அந்தக் குழுமத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே, அரியர் தேர்வு ரத்து என்பது தவறான முடிவு எனத் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை நடத்தத் தயார் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்திடம் தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

சுய விளம்பர மோகத்திற்காக, உரிய ஆலோசனைகளின்றி, அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செயல்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர். மாணவர்களின் நியாயமான - தகுதியான - வேலைவாய்ப்புக்குரிய தேர்ச்சிக்கு வழிவகை காண்பீர்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details