தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி சாவு! - Police Investigation

திருப்பூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

trippur

By

Published : Jul 28, 2019, 3:14 PM IST

திருப்பூர் மாவட்டம் ஜீவா காலனி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் ராஜா முத்துக்குமார். இவர் இன்று காலை தனது நண்பர்களுடன் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள தனலட்சுமி மில் என்ற பகுதியில் மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் நீச்சல் தெரியாத நண்பர்கள் தண்ணீரில் இறங்காமல் மேலே நின்றிருக்க ராஜா தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் சென்ற ராஜா அதிக நேரம் வெளிவராத நிலையில் பயந்துபோன அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜா உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கிணற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜா முத்துக்குமார்

ABOUT THE AUTHOR

...view details