தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து சக்கரத்தில் மாட்டி உயிரிழந்த இளைஞர்; நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சி! - சிசிடிவி காட்சி

திருப்பூர்: எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அருண்குமார்

By

Published : Aug 2, 2019, 7:28 PM IST

Updated : Aug 2, 2019, 9:31 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த முத்துச்செட்டி பாளையம் பகுதியைச் சேரந்த அருண்குமார் (21). இவர் அவிநாசியில் உள்ள தனியார் ஹார்டுவேர் கடையில் உதவி கணக்காளராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடையில் சில பேப்பர்களை நகலெடுத்து விட்டு மீண்டும் புதிய பேருந்து நிலையம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சிசிடிவி காட்சி

அப்போது கோவையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து இடதுபுறமாக சென்ற அருண்குமாரின் இருசக்கர வாகனத்தை உரசியது. இதில், நிலை தடுமாறிய அருண்குமார் சரிந்து கீழே விழுந்தபோது, பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். பின்னர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Aug 2, 2019, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details