தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 14, 2019, 9:32 PM IST

ETV Bharat / state

விஷ வாயு தாக்கி வட இந்திய இளைஞர்கள் பலி...!

திருப்பூர்: கழிவு தொட்டியை சுத்தம் செய்யச் சென்ற 4 வட மாநில தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட இந்திய இளைஞர்கள் பலி

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை என்பதால் சாய சலவை ஆலைகளில் சேரும் கழிவுநீர் அடைத்து வைத்திருந்த தொட்டியை சுத்தம் செய்ய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பருக் அகமது என்பவர் உள்ளே சென்ற நிலையில் மயங்கி விழுந்தார். இவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக அன்வர் உசேன், அபு, தில்வார் உசேன் என உள்ளே இறங்கிய அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். இறுதியில் விஷ வாய்வு தாக்கி மயங்கிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வட இந்திய இளைஞர்கள் பலி

இதனையடுத்து நால்வர் உடல்களையும் வீரபாண்டி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் ரசாயனக் கழிவுகள் சேரும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைபடுத்தியதே உயிரிழப்பிற்கு காரணம். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சியின் அறிவுறுத்தலின்படி சாய சலவை ஆலை செயல்படுகிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் , 4 பேர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் .

ABOUT THE AUTHOR

...view details