தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பூரில் திறந்திருந்த வீட்டில் செல்போன் திருடிய பெண் கைது

திருப்பூர்: தெற்கு காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் திறந்திருந்த வீட்டில் செல்போன் திருடிய பெண்ணை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைதுசெய்தனர்.

திறந்திருந்த வீட்டில் செல்போன் திருடிய பெண் கைது
திறந்திருந்த வீட்டில் செல்போன் திருடிய பெண் கைது

By

Published : Oct 6, 2020, 3:23 PM IST

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் திறந்திருக்கும் வீட்டில் பெண் உள்ளே சென்று செல்போன் திருடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் திருப்பூர் கே.வி.ஆர். நான்காவது தெருவில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

திறந்திருந்த வீட்டில் செல்போன் திருடிய பெண் கைது

இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த சாந்தி (37) என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் திருடி விற்பனை செய்துவந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சாந்தியை கைதுசெய்து, அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆறு செல்போன்களைப் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: கடையில் எதிர்பார்த்த பணம் இல்லை: பழங்களைத் திருடிய திருடன்!

ABOUT THE AUTHOR

...view details