மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சியினருடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
வாக்கு எண்ணிக்கை ஆலோசனை கூட்டம் - சட்டமன்ற இடைத் தேர்தல்
திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி, தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
file pic
இக்கூட்டமானது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் காவல்துறை உதவி ஆணையர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.