தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பர் வீட்டுக்குச் சென்றபோது நேர்ந்த துயரம்! - 4 பேர் பலி - accident

திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே அரசுப் பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

accident

By

Published : Jul 14, 2019, 2:57 PM IST

கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்தவர் முரளிகண்ணன். இவர் அங்குள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகிறார். தன்னுடன் வேலை செய்யும் சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன், பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு நேற்றிரவு புறப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய கார்

நள்ளிரவு கார் வெள்ளக்கோவில் அடுத்த வேலப்பநாயகன் வலசு பிரிவு என்ற இடத்தில் சென்றபோது நிலைதடுமாறி எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் முரளிகண்ணன், சொர்ண மூர்த்தி, நடராஜ், சுதர்சன் ஆகியோர் காருக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உயிர் தப்பியவருக்கு முதலுதவி

உடன் சென்ற பாலச்சந்திரன், சுரேஷ் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நண்பர் வீட்டுக்குச் சென்றபோது நேர்ந்த துயரம்! - 4 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details