நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்தும், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திருப்பூர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நொய்யல் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
'அக்ஷ்யா கேபிள் நிறுவனம் பற்றிய ஸ்டாலினின் கருத்து பொய்யானது' - thiruppur
திருப்பூர்: தனியார் கேபிள் நிறுவனம் தான் நடத்துவதாக ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அக்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலின் அறிக்கை குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, தமிழ்நாடு அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்பு வழங்கயிருக்கும் சூழ்நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனியார் கேபிள் உரிமம் இணையம் மூலம் பெறப்படுவதால், அக்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்றார்.