அந்த வீடியோவில், அரசு மருத்துவமனை ஊழியர், லஞ்சப்பணத்தை மிரட்டி கேட்டு வாங்குவதும், 'இரு சடலத்துக்கு குறைத்துக்கொள்ளுங்கள் குடும்பத்தாரிடம் பணம் இல்லை. அனுசரித்து பெற்றுக்கொண்டு நல்ல படியாக முடித்துத் தாருங்கள்' என உயரிழந்தவர்களின் உறவினர்கள் பேசுவதும் இடம்பெற்றுள்ளது. மேலும், வாங்கிய பணத்தை அவ்வர் தனது டேபிள் விரிப்புக்கு கீழ் வைப்பதும் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில், "அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்கு லஞ்சம் வாங்குவது வாடிக்கையாக உள்ளது. இரு உடல்களுக்கும் தலா ரூ. 1500 வீதம் 3 ஆயிரம் ரூபாயை மருந்தாளுனர் வாங்கியுள்ளார்" என்றனர்.