திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் முகமது பாஷித். தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த அவர், காங்கேயம் சாலையில் தனது நண்பருடன் இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பந்தயத்தால் பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்! - bike race
திருப்பூர்: இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்டபோது பத்தாம் வகுப்பு மாணவன் முகமது பாஷித் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
bike race student death
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சென்றபோது, முகமது பாஷித் நிலைதடுமாறி விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும், விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.