தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறாவளி காற்றில் அரசமரம் சாய்ந்து காரில் இருந்தவர் பலி! - கார்விபத்து

திருப்பூர்: சூறவாளிக் காற்றில் அரசமரம் சாய்ந்து கார்மீது விழுந்ததில் காரில் இருந்த மளிகைக் கடைக்காரர் உயிரிழந்தார்.

tree
tree

By

Published : Dec 8, 2020, 1:10 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உள்ள சோமனூத்து பகுதியில் மளிகைக்கடை நடத்திவருபவர் நாச்சிமுத்து மகன் அசோக்குமார் (45). இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு ரஞ்சித்குமார், பரணி என இரு பிள்ளைகள் உள்ளனர். அசோக்குமார் சோமனூத்து கிராமத்தில் மளிகைக்கடை நடத்திவருகின்றார்.

சாய்ந்த அரசமரம்

அசோக் குமார் கடைக்குத் தேவையான பொருள்களை ஆம்னி காரில் தினந்தோறும் சென்று வாங்கிவருவது வழக்கம். அதேபோன்று நேற்று தாராபுரத்தில் உள்ள ஒரு மொத்த வியாபாரக் கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டு சோமனூத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. இந்நிலையில், சிக்ணாபுரம் பகுதி அருகே வந்தபோது, சாலையின் ஓரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்து ஆம்னி காரின் மேல் விழுந்தது. இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த அசோக் குமார்

இது குறித்து அங்கிருந்தவர்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த பணியாளர்கள் மரத்தை வெட்டி இடிபாட்டில் சிக்கி கிடந்த அசோக்குமாரை மீட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட அசோக் குமாரின் உடலை அலங்கியம் காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details