தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்புக்கு மத்தியில் குப்பையை கொட்டிய வாகனம் - சிறைபிடித்த பொதுமக்கள் - Residential area

திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பைகளை கொட்டிச் சென்ற வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குப்பையை கொட்ட வந்த வாகனத்திடம் பொதுமக்கள் முறையிடுகின்றனர்
குப்பையை கொட்ட வந்த வாகனத்திடம் பொதுமக்கள் முறையிடுகின்றனர்

By

Published : Jan 10, 2021, 2:52 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் அடுத்த விஜிபி கார்டன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் குடியிருப்புக்கு மத்தியில் கொட்டி செல்வதாக ஏற்கனவே அப்பகுதி பொதுமக்கள் நல்லூர் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று (ஜன. 10) குப்பைகளை கொட்ட வந்த வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்ததோடு, குப்பைகளை கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு, அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருப்பதால், இச்செயலை கைவிடவேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பையை கொட்ட வந்த வாகனத்திடம் பொதுமக்கள் முறையிடுகின்றனர்

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:சிதிலமடைந்த வீட்டில் சிரமப்படும் தூய்மை பணியாளர்கள்: கண்டுகொள்ளாத அரசு?

ABOUT THE AUTHOR

...view details