திருப்புர் மாவட்டம் 10ஆம் வகுப்பு தேர்வில் 98.53% சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய 10ஆம் வகுப்பு மாணவர்கள் - 10ஆம் வகுப்பு மாணவர்கள்
திருப்பூர்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து மாணவர்கள் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
10ஆம் வகுப்பு மாணவர்கள்
இந்நிலையில், திருப்புர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த வருடம் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக தேர்ச்சி பெற்றுள்ளதால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.