திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
திருப்பூர் வாக்காளர் பட்டியல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இங்கு, ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
திருப்பூர் வாக்காளர் பட்டியல்
இதில் ஆண் வாக்காளர்கள் 11,42,775 பேரும், பெண் வாக்காளர்கள் 11,60,809 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 258 பேர் என மொத்தம் 23 லட்சத்து 03 ஆயிரத்து 842 பேர் வாக்காளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தலுக்காக அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.