திருப்பூரின் முக்கிய சாலையாக உள்ள யூனியன் மில் ரோடு, வீரபாண்டி, அவிநாசி சாலை என போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் சாலைகள் முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் இச்சாலைகளின் நிலை இன்னும் மோசமாகி விடுகின்றன. இச்சாலைகளில் பயணம் செய்யும் சம்மந்தப்பட்ட அலுவலர்களும் இதைக்கண்டும், காணாமலும் இருந்து விடுகிறார்கள். இதனால், தினம்தோறும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
குண்டும் குழியுமாக உள்ள திருப்பூர் மாநகரச் சாலைகள்; சீர் செய்யக் கோரும் மக்கள் "திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளில் எந்த வார்டு பகுதிக்குச் சென்றாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படும். குறிப்பாக அவிநாசி, அத்திக்கடவு திட்டத்திற்காக சாலைகளை தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருடங்களாகியும் இதுவரை குழாய்கள் மூடப்பட்ட சாலைகளை செப்பனிடப்படவில்லை.
குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் இதனால், திருப்பூர் மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிகளவில் விபத்தில் சிக்குகிறார்கள். இரவு நேர பயணம் என்பது ஒரு சாகச பயணமாகவே இருக்கிறது. கனரக வாகனங்கள் இச்சாலைகளில் சிக்கிக்கொள்ளும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
சாலையில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழை நீர் இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் மனு அளித்தும் இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை" என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:குடியிருப்புக்கு மத்தியில் அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு!