யூஜிசி மற்றும் மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டாய இணையவழி தேர்வை ரத்து செய்ய வேண்டும் - இந்திய மாணவர் சங்கம்
திருப்பூர் : யுஜிசி வெளியிட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கட்டாய இணையவழி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் யுஜிசி வெளியிட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான கட்டாய இணையவழி தேர்வை ரத்து செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு முந்தைய செமஸ்டர் மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு, தந்தை பெரியார், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற பகுதிகளை நீக்கியதை கண்டித்தும், அமேசான் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த யுஜிசி மற்றும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.