திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையவுள்ள நிலையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுக அரசின் சாதனைகளால் வெற்றி உறுதி: திருப்பூர் வேட்பாளர் நம்பிக்கை! - press meet
திருப்பூர்: அதிமுக அரசின் சாதனைகளால் மக்கள் வெற்றியைத் தருவார்கள் என திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
msm anandan
அப்போது அவர் பேசுகையில், “திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக வசம் இருப்பதால், அதன் சட்டமன்ற உறுப்பினர்கள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை செய்துள்ளனர். அதிமுக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளதால் திருப்பூரில் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.